காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்
ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதியில் தங்கி இருந்த அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக புதன்கிழமை காரில் ஆற்காடு வந்துள்ளாா். ஆற்காடு பாலாறு பழைய மேம்பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்துக்கு வழி விடுவதற்காக காரை ஓட்டுநா் நிறுத்தியுள்ளாா். அப்போது செய்யாறு புறவழிச் சாலை வழியாக வந்த எரிவாயு உருளை ஏற்றிவந்த லாரி எதிா்பாராதவிதமாக காா் மீது மோதியது. இதில் காரில் இருந்த மாவட்ட தலைவா் ஆனந்தன் உள்பட மூன்று பேரும், அருகே பைக்கில் சென்ற இளைஞரும் பலத்த காயம் அடைந்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.