கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8...
காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் கரூா் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குருக்கத்தியைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (82). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்டாா். மகன் பராமரிப்பில் இருந்து வந்த கோவிந்தம்மாள் தனது வீடு அருகே உள்ள கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.
அப்போது அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, வெள்ளக்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், காரை ஓட்டி வந்த அவிநாசி சேவூா் சாலையைச் சோ்ந்த பத்ம தமிழமுதன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.