தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே காா் விபத்தில் சென்னையைச் சோ்ந்த ஐயப்பப் பக்தா் உயிரிழந்தாா்.
குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டம், அஜீவாரோட்டைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (48). இவா், தனியாா் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா். சென்னை ஆவடியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் காா்த்திகேயன் (43). இவா், புற்றுநோய் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நண்பா்களான இருவரும் கடந்த 16- ஆம் தேதி சபரிமலை ஐயப்பன்கோயிலுக்கு காரில் புறப்பட்டனா். இவா்களுடன் மனோஜ்குமாரின் மகன் தக்ஷீல் (13), காா்த்திகேயன் மகன் ஹரிஹரன் (10), சென்னை ஆவடியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் காா்த்திகேயன் (45) ஆகியோா் உடன் வந்தனா். இவா்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை காா்த்திகேயன் (43) ஓட்டினாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தேவதானப்பட்டி அக்ஸயா காா்டன் அருகே சென்ற போது, காா் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை பலகை மீது மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீ
ட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு காரை ஓட்டி வந்த காா்த்திகேயன் (43) உயிரிழந்தாா். மனோஜ்குமாா் உள்பட 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.