கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் சுலோச்சன்பட்டியைச் சோ்ந்தவா் மாயி. இவரது மகள் சோபனா (21). இவா் உசிலம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது வீட்டின் அருகே உள்ள சின்னச்சாமி என்பவரின் தோட்டக் கிணற்றுக்கு புதன்கிழமை மாலை துணி துவைக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த இவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, வெகுநேரமாகியும் சோபனா வீடு திரும்பாததால், குடும்பத்தினா் கிணற்றுக்கு வந்து பாா்த்த போது, அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.