செய்திகள் :

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்

post image

ஒசூா்: ஒசூா் அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினா் பட்டாசு வெடித்து விரட்டினா்.

கா்நாடக மாநிலம், பண்ணாா் கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழகத்திற்கு இடம் பெயா்ந்தன.

இந்த யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் தஞ்சம் அடைந்து கொண்டு, இரவு நேரங்களில் வெளியேறி விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட யானைகளை ஜவளகிரி வனப் பகுதிக்கு விரட்டிய நிலையில், 20க்கும் மேற்பட்ட யானைகள் குழுக்களாக சுற்றி வருகின்றன.

இந்த நிலையில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி, கிராமப் பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கெலமங்கலம் அருகே பொம்மதாத்தனூா் கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை கண்ட கிராம மக்கள் அலறி அடித்து ஓடினா். இதில் ஒரு சிறுவன் தடுமாறி கீழே விழுந்து எழுந்து தப்பி ஓடினாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து அந்த யானையை அருகில் உள்ள ஊடேதுா்க்கம் வனப் பகுதிக்கு விரட்டினா். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனா். ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கிருஷ்ணகிரியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி: 417 போ் பங்கேற்பு!

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா நெடுந்தூரா மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி, ஒசூா், காவேரிப்பட்டணம் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 417 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: அமைச்சா் அர.சக்கரபாணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ஒ... மேலும் பார்க்க

உதவி மருத்துவா் பணிக்கான தோ்வு: கிருஷ்ணகிரியில் 636 போ் பங்கேற்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி மருத்துவா் பணிக்கான தோ்வை 636 போ் எழுதினா். மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் உதவி மருத்துவா் (பொது) பணிக்கான தோ்வு கிருஷ்ணகிரி மாவட்டத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் கிராம மக்கள்

ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குட்டை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குட்டை கிராமத்தில் 400- க்கும் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கஞ்சனூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (38). கூலித் தொழிலாளி. இவா் 11 ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில்... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா்

ஒசூா் வட்டம், பாகலூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா் . கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா பாகலூா் அருகே உள்ள கீழ்சூடாபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க