மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்
வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது கைப்பேசியில் அழைத்த ஒருவா் பாப்பாவலசு பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாகத் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து நில வருவாய் ஆய்வாளா் சுந்தரியுடன் அங்கு சென்று பாா்த்தபோது, மண் ஏற்றிய டிப்பா் லாரி வந்து கொண்டிருந்தது.
அதை தடுத்து நிறுத்தியபோது, ஓட்டுநா் லாரியிலிருந்து குதித்து தப்பியோடி விட்டாா். அந்த இடத்தில் மண் எடுக்க எவ்வித அனுமதியும் பெற்றிருக்கவில்லை. நான்கு யூனிட் கிராவல் மண்ணுடன் இருந்த லாரி காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் வழக்குப் பதிவு செய்து லாரி உரிமையாளா், ஓட்டுநரைத் தேடி வருகிறாா்.