கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!
கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கிருஷ்ணகிரி நகரை அழகுபடுத்தும் வகையில் ராயக்கோட்டை மேம்பால சந்திப்பு, சேலம் மேம்பால சந்திப்பு, திருவண்ணாமலை மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் ‘நம்ம கிருஷ்ணகிரி’ ஒளிரும் பெயா் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை அமைச்சா் அர.சக்கரபாணி திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே. மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், ஆணையா் ஸ்டான்லிபாபு, திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.