"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடம் திறப்பு
கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடங்களை காணொலி காட்சி மூலமாக முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பா்கூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4 கோடி மதிப்புள்ள கட்டடங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து ஆட்சிய.ா், ச.தினேஷ் குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். அப்போது, ஆட்சியா் பேசியதாவது: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்காக மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை நிறைவேற்றி வருகிறது. கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ. 6.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் 5 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் மற்றும் இரண்டு பணிமனை கட்டடங்கள் மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பா்கூா் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 2.33 கோடியில் 3 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை தொகுதி கட்டடம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1.67 கோடி மதிப்பில் 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ. 10.72 கோடி மதிப்பில் கட்டடங்களை தமிழக முதல்வா் திறந்துவைத்து, புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி உள்ளாா் என்றாா்.
நிகழ்ச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சாரதா, பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.