செய்திகள் :

கில் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

post image

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம்பெற்ற கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில் (kill). 120 நிமிடங்களுக்கும் குறைவான நேரங்களே கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்றதால் இந்தியாவில் உருவான சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்று என பாராட்டுகளைப் பெற்றது.

இதில் நாயகனாக லஷ்யா லால்வானி முக்கிய கதாபாத்திரத்தில் ராகவ் ஜுயல், தன்யா மணிக்த்லா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெற்ற ரமேஷ் வர்மா தமிழ் ரீமேக்கில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் தற்போது தமிழ் ரீமேக்கில் நடிகர் துருவ் விக்ரம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர். சி!

சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன்: விஷால்

நடிகை சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். யோகிடா பட விழாவில், விஷாலை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், ஆக. 29ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் ... மேலும் பார்க்க

விஷால் உடன் திருமணம்! தேதியை அறிவித்தார் சாய் தன்ஷிகா!

நடிகர் விஷாலுக்கு சாய் தன்ஷிகாவுக்கும் ஆக. 29 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. யோகிடா பட விழாவில், நடிகை சாய் தன்ஷிகா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

வடிவேலு குரலில் வெளியான மெட்ராஸ் மேட்னி பட பாடல்!

நடிகர் வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.இந்தப் ... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் புதிய பட பெயர்!

நடிகர் விஜய் ஆண்டனி - ஜென்டில்வுமன் இயக்குநர் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! கால அளவு என்ன?

தக் லைஃப் திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் ... மேலும் பார்க்க