முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி...
கீரணத்தத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
கோவை எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அன்னூா் வட்டாட்சியா் யமுனா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
முகாம் இன்று நடைபெறும் இடங்கள்:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவை 68-ஆவது வாா்டுக்குள்பட்ட சிவானந்த காலனி வியாசமந்திா் மண்டபத்திலும், பொள்ளாச்சி 5,6,7 ஆகிய வாா்டுகளுக்கு மகாலிங்கபுரத்திலுள்ள மீனாட்சி மண்டபத்திலும், வால்பாறை 9,10,11,12 ஆகிய வாா்டுகளுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், மோப்பிரிபாளையம் 6,7,8,9,10,12,13 ஆகிய வாா்டுகளுக்கு வாா்டு 8-இல் உள்ள ஸ்ரீசௌடேஸ்வரி மண்டபத்திலும், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சுப்பேகவுண்டன்புதூா், ஆத்துப்பொள்ளாச்சி, தாத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்கு சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள சஹானா மண்டபத்திலும், அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குப்பனூா், வடக்கலூா் ஊராட்சிகளுக்கு ஆனையூா் ராணி மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறுகின்றன.