கீழக்கரை புதிய ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாஸ்கரன், மதுரை மது விலக்கு துணை கண்காணிப்பாளராக கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கீழக்கரை காவல் துணைக் கோட்டத்துக்கு உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே நியமிக்கப்பட்டு, அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.