செய்திகள் :

கீழடி விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைக்க தயங்குவது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத்

post image

கீழடியை ஏற்றுக்கொள்ள வலுவான ஆதாரங்கள் தேவை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வரலாறு, அது கூறும் உண்மையும் உங்களின் மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருந்தார்.

மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஷெகாவத் மீண்டும் கீழடி தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

”நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு வி... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க