பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கீழாம்பூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கீழாம்பூா் அருகே காக்கநல்லூரில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
காக்கநல்லூா், பிரதான சாலையைச் சோ்ந்த ராமசாமி மகன் கண்ணன் (40). தொழிலாளி. இவரது மனைவி முத்தரசி, அஞ்சல் துறை ஊழியா். கண்ணனின் மதுப் பழக்கம் காரணமாக, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த திங்கள்கிழமை (ஜூலை 7) தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, கண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்தாராம். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].