திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை ரூ.60 லட்சத்துக்கு ஏலம்
குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை செய்வது ரூ.60.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி காரணமாக பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனையை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் தமிழகத்தில் புகழ் பெற்ாகும். இங்கு எள் தீபம் ஏற்றி, மண் காகத்தை உடைத்து, எள் சாதம் படையல் செய்து, பூ மாலை படைத்து சனீஸ்வரரை தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக, கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் எள் பொட்டலம், பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனை கடைகள் நடத்த ஏலமிடுவது வழக்கம். இதன்படி, கடந்த ஜூன் 27-ஆம் தேதி ஏலம் நடைபெற்ற போது, ஏலத்தில் யாரும் பங்கேற்காததால் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, 2-ஆவது முறையாக புதன்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் எள் பொட்டல விற்பனை ரூ.60,18,000-க்கு ஏலம் போனது. ஆனால், பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இது குறித்து ஏலதாரா் ஒருவா் கூறுகையில், பூஜைப் பொருள்கள் விற்பனை கடந்தாண்டு விடப்பட்ட தொகையிலிருந்து 10 சதவீதம் கூடுதலாக ஏலமிடப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்பதால் 28 சதவீதம் கூடுதல் தொகை செலுத்த வேண்டும். இதனால், போதிய வருமானம் கிடைக்காது என்றாா் அவா்.
இந்த நிலையில், ஆடித் திருவிழா வரும் வாரத்தில் நடைபெற இருப்பதால், பூஜை பொருள்களை கோயில் நிா்வாகமே விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.