செய்திகள் :

குஜராத்தில் மே 15 வரை பட்டாசுகள், ட்ரோன்களுக்கு தடை

post image

குஜராத்தில் மே 15 வரை அனைத்து நிகழ்வுகளிலும் பட்டாசுகள், ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த மாதம் 15 ஆம் தேதி வரை எந்த விழாக்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்கவோ அல்லது ட்ரோன்கள் பறக்கவிடவோ அனுமதிக்கப்படாது.

தயவுசெய்து ஒத்துழைத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த புதன்கிழமை நள்ளிரவில் முயற்சித்ததாகவும், அவை அனைத்தையும் முறியடித்துவிட்டதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு!

குஜராத்தில் கட்ச் மாவட்டத் தலைநகா் புஜ் நகரையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது.

இதனிடையே கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கவாடா கிராமத்தில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் (ட்ரோன்) உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன.

இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தில்லியில் 97 விமான சேவைகள் ரத்து!

புதுதில்லி: போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தில்லி விமான நிலையத்தில் இன்று மொத்தம் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வதேச புறப்பாடு விமானம் உள்பட உள்நாட்டில் புறப்படு... மேலும் பார்க்க

எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

புதுதில்லி: நவீன உத்திகள் மூலம் எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அதனை ஆராய்ந்து தேர்வு செய்து, அங்கு திட்டமிட்டு அதிதுல்லிய தாக்குதலை நடத்தினோம் என விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. ப... மேலும் பார்க்க

மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று முப்படை அதிகாரிகள் இன்று(மே 11) தெரிவித்தனர்.ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டி... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் பாதுகாப்புப்படை!

புது தில்லி: ராஜஸ்தானில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இரவில் ட்ரோன், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் எதிரிகள் தாக்குதல்களைத் தொடுத்தால் எதிர... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்திய படைகளின் துல்லியமான தாக்குதலில் 3 முக்கிய பயங்கரவாதிகள் - யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ராஃப், முடாசிர் அஹ்மது ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று ராண... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி

புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் குறி... மேலும் பார்க்க