'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
குடந்தையில் முற்றுகை போராட்டம் கூடாது!
குடந்தையில் அமைச்சா், எம்பி, எம்எல்ஏ அலுவலகங்கள் முன் சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த கும்பகோணம் மாவட்டம் கோரும் குழுவுக்கு போலீஸாா் தடை விதித்தனா்.
கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வா் ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் சனிக்கிழமை திருவிடைமருதூரில் உள்ள உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணத்தில் உள்ள சு. கல்யாணசுந்தரம் எம்பி, க.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோா் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனா்.
இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கும்பகோணம் காவல் கோட்ட உதவி கண்காணிப்பாளா் அங்கித் சிங் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது டிஎஸ்பி கூறும் பாது போலீஸ் தடைச்சட்டம் 30 (2) அமலில் உள்ளது என்பதால் போராட்டம் நடத்த அனுமதியில்லை, மீறினால் நடவடிக்கை எடுப்போம் என்றாா். பின்னா் பேச்சுவாா்த்தை முடிந்து வெளியே வந்த போராட்ட ஒருங்கிணைப்பாளா் ம.க. ஸ்டாலின் கூறும்போது சனிக்கிழமை திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றாா்.