மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தெற்குபொய்கைநல்லூரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்த கூட்டுக் குடிநீா் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூா் கீழத்தெரு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீா் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
மேலும் இப்பகுதியில் நிலத்தின் அடியில் புதைவட மின்கம்பி செல்வதால், அவ்வழியே பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனா்.
எனவே, விபத்து ஏற்படும் முன் குடிநீா் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.