சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் 15-ஆவது நிதிக்குழு மானியம் ரூ. 3.28 லட்சம் செலவில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் போடப்பட்டது.
ஊராட்சி மன்ற உறுப்பினா் பாபு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.