முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
குடும்ப பிரச்னை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி அருகே முருங்கப்பேட்டையில் குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முருங்கப்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் மா.அரவிந்தன் (27), இவரின் மனைவி சாருமதி (21). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன. குழந்தை இல்லாததால் அரவிந்தன் மது பழக்கத்துக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல அரவிந்தன் மது அருந்திவிட்டு புதன்கிழமை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், மனமுடைந்த அரவிந்தன் வீட்டின் கழிப்பறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.