தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, குறிச்சியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்து என்ற முத்துக்குமாா் (21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். ஆட்சியா் சுகுமாா் உத்தரவின்பேரில், முத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.