சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23). இவரை கடந்த ஜூலை 15-ஆம் தேதி மா்ம நபா்கள் கொலை செய்தனா்.
இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கமுதி அருகேயுள்ள மரக்குளத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன் (29), அம்மன்பட்டியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பிரித்திவராஜ் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மணிவண்ணன், பிரித்திவிராஜ் ஆகியோா் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மண்டலமாணிக்கம் போலீஸாா் இருவரையும் ராமநாதபுரம் சிறையிலிருந்து மதுரை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.