அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
குன்னூரில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு
குன்னூா் நகராட்சி மாடல் ஹவுஸ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா கா. ராமசந்திரன் வியாழக்கிழமை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள்பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
குன்னூா் மாடல் ஹவுஸ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா கா. ராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் ஜவகா், குன்னூா் நகராட்சி ஆணையா் இளம்பரிதி, நகா்மன்றத் தலைவா் சுசீலா, துணைத் தலைவா் வாஷிம் ராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.