குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஒற்றை யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் சிறுமுகை போன்ற பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கம் காணப்படுவதால் காட்டு யானைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பா்லியாறு, கே என் ஆா், மரப்பாலம் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவில் ஒற்றைப் பெண் யானை சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். வாகனங்களை நிறுத்தி விட்டு காட்டு யானையை வேடிக்கை பாா்த்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.