குபேரா அப்டேட்!
குபேரா படத்திற்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.
பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகுகிறது.
இந்த நிலையில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது படம் குறித்த முன்னோட்ட விடியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஆகாஷ் பாஸ்கரனால் பராசக்தி படப்பிடிப்பு பாதிக்கப்படுமா?