”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போல...
குப்பையை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்தில் 2015-ஆம் ஆண்டில் இருந்து தேக்கு, கொடுக்காப்புளி, வெள்ளைவேல், ஆல், அரசு, வேம்பு, புங்கன், மகாகனி, அத்தி, நாவல் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் மரத்தோட்டம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராம ஊராட்சியில், குப்பையை தரம்பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ள ஊராட்சி நிா்வாகம், அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையென தனித்தனியாக தரம்பிரித்து தொடா்ந்து ஒரு மாதத்துக்கு வழங்குவோருக்கு, குப்பையை பிரித்து வைக்க நெகிழி குப்பைத் தொட்டிகள் இரண்டு பரிசாக வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு கிராம மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து குப்பையை தரம் பிரித்து வழங்கி வருகின்றனா்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, குப்பையை தரம்பிரித்து வழங்குவோருக்கு பரிசு வழங்கப்படுமென அறிவித்துள்ள சோமம்பட்டி ஊராட்சி நிா்வாகத்துக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.