குமரியில் கண்ணாடி பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!
கன்னியாகுமரியில் திருள்ளுவர் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 30) திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீா்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்படும்.
இதனால் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து பாலம் அமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதை நிறைவேற்றும் வகையில், ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம் 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவா் வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதல்வா் ஸ்டாலின், இந்த பாலத்தை திறந்து வைத்தார்.
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.