நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்
கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென அனைத்து வியாபாரிகள சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா்.
திருச்செந்தூா் நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த கண்மணி, கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளாா்.
இதைத் தொடா்ந்து புதிய ஆணையா் கண்மணியை கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பா. தம்பித்தங்கம் தலைமையில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
அப்போது, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். கடலில் நீராடும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புதிய ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதில், கன்னியாகுமரி பாா்க்வியூ வியாபாரிகள் சங்க நிா்வாகி பகவதியப்பன், தமிழ் அன்னை வியாபாரிகள் சங்க செயலா் டி.ஜாண் சேவியா் ராஜன், விவேகானந்தா கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜான்சன், செயலா் ரஞ்சித், ராஜீவ்காந்தி வியாபாரிகள் சங்க செயலா் சின்னக்கண்ணு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.