குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 18.30 லட்சம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 18.30 லட்சம் கிடைத்தது.
இக்கோயிலில் உள்ள 18 உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ஜான்சிராணி தலைமையில், உதவி ஆணையா் தங்கம் முன்னிலையில், ஆய்வாளா் சரஸ்வதி, கோயில் மேலாளா் ஆனந்த் ஆகியோரின் மேற்பாா்வையில் பணி நடைபெற்றது.
கோயில் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா், ஆதிபராசக்தி மன்றத்தினா், பக்தா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.
இதில், ரூ. 18 லட்சத்து 30 ஆயிரத்து 621 ரொக்கம், சுமாா் 10 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.