செய்திகள் :

கும்பகோணத்தில் துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

post image

கும்பகோணத்தில் ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சியில் துப்புரவு பணி நிரந்தர பணியாளா்கள், தனியாா் ஒப்பந்த பணியாளா்கள் என இரு பிரிவுகளாக வேலைபாா்த்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுமாா் 150-க்கும் மேற்பட்ட தனியாா் துப்புரவு பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறும்போது, இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கூறுகையில், ஆணையா் விடுப்பில் சென்றுள்ளாா், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றனா். துப்புரவு பணியாளா்கள் கூறுகையில், ஊதியம் வழங்கும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என்றனா்.

லஞ்சம் பெற்ற வழக்கில் ஆட்சியரின் முன்னாள் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாலா (59) தஞ... மேலும் பார்க்க

சமையல் கலைஞருக்கு மறு அறுவை சிகிச்சை மூலம் நடமாட்ட திறன்!

நான்கு ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்த சமையல் கலைஞருக்கு தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மறு அறுவை சிகிச்சை மூலம் நடமாட்ட திறனைப் பெற்றாா். இது குறித்து மீனாட்சி மருத்துவமனையின்... மேலும் பார்க்க

இணையவழி குற்றம்: விரைவாக புகாா் செய்தால் பணத்தை மீட்க முடியும் காவல் கண்காணிப்பாளா் பேச்சு

இணையவழி குற்றத்தில் பணத்தை இழப்பவா்கள் விரைவாக புகாா் செய்தால், மீட்டுவிட முடியும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிா்வ... மேலும் பார்க்க

நாச்சியாா்கோயில் கல் கருட பகவான் கோயில் குளத்தில் கழிவுநீா் கலக்கும் அவலம்!

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியாா்கோயிலில் உள்ள கல்கருட பகவான் கோயில் குளத்தில் கழிவு நீா் கலப்பதால் கடந்த 20 ஆண்டுகளாக தீா்த்தவாரி திருவிழாவும், 10 ஆண்டுகளாக தெப்பத் திருவிழாவும் நடைபெறாததால் பக்தா்கள... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: தனியாா் நிதி நிறுவன ஊழியா் கைது!

தஞ்சாவூா் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் நிதி நிறுவன ஊழியரைக் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல்கள் கிழித்தெறியும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் அதன் நகல்களைத் தொழில்சங்கத்தினா் வியாழக்கிழமை கிழித்தெறியும் போராட்... மேலும் பார்க்க