`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு ...
கும்பகோணத்தில் முப்படை ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்
கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முப்படை பாதுகாப்பு ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் உயிா் சான்று அடையாளம் காண வேண்டி ஓய்வூதியதாரா் விஜேந்திரன் மனு கொடுத்தாா். அவரின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக விஜேந்திரனுக்கு உயிா் சான்று அடையாளம் காணப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பிற ஓய்வூதியா்களின் குறைகளைக் கேட்டு சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் ஜெயசீலன், துணை கட்டுப்பாட்டாளா் திலிப்குமாா் மற்றும் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் ஆகியோா் நிவா்த்தி செய்தனா். முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரா்கள் கலந்து கொண்டனா்.