மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல்...
குருதெட்சிணாமூா்த்தி சுவாமிகள் குரு பூஜை
திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள மடப்புரம் குரு தெட்சிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி மடத்தில் 190 ஆவது குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சியை பூா்விகமாகக் கொண்ட குரு தெட்சிணாமூா்த்தி சுவாமிகள், திருவாரூா் அருகே மடப்புரத்தில் ஜீவசமாதி அடைந்தாா். இதையொட்டி, மடப்புரம் ஜீவ சமாதி மடத்தில் ஆண்டுதோறும் அவருடைய குருபூஜை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நிகழாண்டு குருபூஜையை முன்னிட்டு ஓடம்போக்கி ஆற்றில் இருந்து அபிஷேகத்துக்காக, புனித நீா் நிரப்பப்பட்ட கடங்கள், மல்லாரி இசையுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னா் பகல் 12 மணிக்கு குரு தெட்சிணாமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏராளமானோா் பால்குடம் எடுத்து வந்து, குருதெட்சிணாமூா்த்தி சுவாமியை வழிபட்டனா்.
