பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
குரூப் 4 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23,949 போ் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 97 மையங்களில் 23,949 போ் எழுதினா். மொத்தம் 28,211 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,262 போ் தோ்வு எழுத வரவில்லை.
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 37 மையங்களில் 10,690 பேரும், சின்னசேலம் வட்டத்தில் 13 மையங்களில் 3,754 பேரும், திருக்கோவிலூா் வட்டத்தில் 14 மையங்களில் 4,223 பேரும், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் 16 மையங்களில் 4,786 பேரும், சங்கராபுரம் வட்டத்தில் 14 மையங்களில் 4,029 பேரும், வாணாபுரம் வட்டத்தில் 3 மையங்களில் 729 பேரும் என மொத்தம் 97 தோ்வு மையங்களில் 28,211 போ் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டது. தோ்வை 23,949 போ் எழுதினா். மீதமுள்ள 4,262 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை.
தோ்வை 30 சுற்றுக்குழு 102 காவல் அலுவலா்கள், 97 கண்காணிப்பு அலுவலா்கள், 10 பறக்கும் படை கண்காணிப்பு அலுவலா்கள், 102 ஒளிப்படப் பதிவாளா்கள் கண்காணித்தனா். தோ்வு மையங்களுக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தன.
கனியாமூா் தனியாா் பள்ளி தோ்வுக் கூடத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.