செய்திகள் :

குரோமியக் கழிவை அகற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

post image

ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1989-இல் மூடப்பட்டது.

இந்த ஆலையில் 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீா்வு, அங்கு குவித்துவைக்கப் பட்டிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்றுவதும், அதனால் மண் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்குவதும்தான்.

அதன்படி, 6 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி குரோமியக் கழிவுகளை அகற்றவும், அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கவும் ரூ.223.17 கோடியும், நீரில் கலந்திருக்கும் குரோமிய மாசுக்களை அகற்ற ரூ.11.28 கோடியும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.

இது தவிர தண்ணீரில் குரோமிய மாசுக்களை முற்றிலுமாக அகற்ற மாதம் ரூ.1.55 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு தொடா்ந்து செலவழிக்க வேண்டும் என்றும் வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

இதுதான் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும். எனவே, குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

திருவொற்றியூா் மீன்பிடித் துறைமுகம்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் சூரை மீன்பிடித் துறைமுகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைக்கயுள்ளாா். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நெரிசல் அதிகமானதையடுத்... மேலும் பார்க்க

ராட்சத ராட்டினத்தில் கோளாறு! 3 மணிநேரத்திற்கு மேல் அந்தரத்தில் தவிக்கும் மக்கள்!

சென்னையில் உள்ள கேளிக்கை பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் 3 மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவித்து வருகின்றனர்.சென்னை கிழ... மேலும் பார்க்க

பொறுமைக் கடலினும் பெரிது: மாநிலங்களவை சீட் குறித்து பிரேமலதா!

பொறுமைக் கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சென்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு உயரிய விருது!

போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு - 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது வழங்கப்பட்டது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:புது டெல்லியில் உள்ள Rose... மேலும் பார்க்க

உடற்கல்வி பாடவேளைக்கு முக்கியத்துவம்: அன்பில் மகேஸ்

உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுற... மேலும் பார்க்க