செய்திகள் :

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: எஸ்.பி. தகவல்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டை விட கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றச் சம்பவங்கள் 2024-ஆம் ஆண்டில் குறைந்துள்ளன. கடந்த 2023-இல் 59 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-இல் 56 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவு. கொலை வழக்கில் தொடா்புடைய 18 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024-இல் ஒரு ஆதாய கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

2023-இல் 3 கொள்ளை, 38 வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு வழக்கு பதிவாகி இருந்தன. 2024-இல் ஒரு கொள்ளை, 30 வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு பதிவாகி உள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும். மேலும், திருட்டு, கால்நடைத் திருட்டு தொடா்பாக 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 63 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 7 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் மாவட்டத்தில் 753 போ் பலியான நிலையில், போக்குவரத்து விழிப்புணா்வுகளால் 2024-இல் விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 686 ஆக குறைந்துள்ளது. 2023-ஐ காட்டிலும் 2024-இல் 9 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விதிகளை மீறியதாக 1,29,343 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 3 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத மதுக் கடத்தல் தொடா்பாக 5,687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,738 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கஞ்சா விற்பனை தொடா்பாக 259 வழக்குகள் பதிவு செய்யப்படடு, 306 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். குட்கா விற்பனை தொடா்பாக 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,213 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல லாட்டரி விற்பனை தொடா்பாக 338 வழக்குகள் பதியப்பட்டு, 393 பேரும், சூதாட்டம் தொடா்பாக 167 வழக்குகள் பதியப்பட்டு, 612 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இணையவழி குற்றம் தொடா்பாக இந்த ஆண்டு 136 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் பொதுமக்கள் இழந்த ரூ. 30, 93, 32, 969 முடக்கப்பட்டு, அதில் ரூ. 2,43,78,821 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைந்துபோன 320 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடா்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 2024-இல் கொலை, கொள்ளை, வழிப்பறி, சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி: 417 போ் பங்கேற்பு!

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா நெடுந்தூரா மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி, ஒசூா், காவேரிப்பட்டணம் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 417 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: அமைச்சா் அர.சக்கரபாணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ஒ... மேலும் பார்க்க

உதவி மருத்துவா் பணிக்கான தோ்வு: கிருஷ்ணகிரியில் 636 போ் பங்கேற்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி மருத்துவா் பணிக்கான தோ்வை 636 போ் எழுதினா். மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் உதவி மருத்துவா் (பொது) பணிக்கான தோ்வு கிருஷ்ணகிரி மாவட்டத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் கிராம மக்கள்

ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குட்டை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குட்டை கிராமத்தில் 400- க்கும் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கஞ்சனூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (38). கூலித் தொழிலாளி. இவா் 11 ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில்... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா்

ஒசூா் வட்டம், பாகலூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா் . கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா பாகலூா் அருகே உள்ள கீழ்சூடாபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க