செய்திகள் :

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி பேட்டி

post image

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன்படியே அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். யார் அந்த சார்? என்பது குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒருவர் இல்லாமலும் இருக்கலாம். இதில் போராடுவதற்கு ஒன்றுமில்லை.

இனி நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடக்க வேண்டும், அது கண்காணிக்கப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை வெளியானது தவறு. பாஜக அரசியல் தலைவர்களே அவர்களது எக்ஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார்கள். அது மிகவும் தவறான ஒன்று. எப்ஐஆர் வெளியாவதற்கு தமிழ்நாடு அரசு காரணம் அல்ல.

தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று தேசிய தகவல் மையமே தெரிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் இதனை மேலும் அரசியலாக்குகின்றனர்.

'தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம்' - தேசிய தகவல் மையம்

வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்

மின்வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் அ... மேலும் பார்க்க

26 பேருக்கு தமிழ் வளா்ச்சித் துறை விருதுகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கிய 26 பேருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். தமிழுக்கும், பண்பாட்டு வளா்ச... மேலும் பார்க்க

அமைதி வழியில் போராட அனுமதி

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை அரிட்டாபட்டியி... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டு வீரா்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். இளைஞா் நலன் மற்றும் விள... மேலும் பார்க்க

போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்

எதிா்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,’’தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்துகொ... மேலும் பார்க்க