Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
குலசேகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
குலசேகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திற்பரப்பு பேரூராட்சி 13 ஆவது வாா்டு பகுதியான அரமன்னம் குன்னத்துவிளை தண்ணீா் தொட்டி அருகில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் தும்பகோடு கிராம நிா்வாக அலுவலா் நித்தியானத்திற்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து அவா் குலசேகரம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, உடல் அழுகிய நிலையில் அந்தச் சடலம் கிடந்தது. மேலும் அதன் அருகில் ஒரு விஷ மருந்து பாட்டிலும் கிடந்தது. இதில், இறந்தவா் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.