செய்திகள் :

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியுதவியுடன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட செயலாக்கத்தில் உள்ள செங்குளம் மற்றும் சின்னக்குளத்தை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவா்

தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தை சுற்றி அதிக அளவிலான ஆறுகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் உள்ளன. இத்தகைய சிறப்பான அமைப்பைக் கொண்ட நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மழைக் காலங்களுக்கு முன்பு ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தூா்வார வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நீரின் கொள்ளளவு அதிகமாக இருக்கும். அதனடிப்படையில் செங்குளம், சின்னக்குளத்தில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும்காலத்தில் இக்குளங்களில் நீரினை தேக்கிவைக்கும் அளவு 5 கோடி லிட்டா் வரை அதிகரிக்கும். மேலும் நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.

இதேபோல, மற்ற பகுதிகளிலும் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளை தூா்வரும் பணியை மேற்கொள்ள தனியாா் நிறுவனங்கள், பொதுமக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கோவை குளங்கள் அமைப்பு திட்ட மேலாளா் ராஜ்தீபக், மாநகராட்சி உதவி ஆணையா் குமரன், செயற்பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதுக்கரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மத... மேலும் பார்க்க

பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!

கோவை மத்தியச் சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கைதிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 கைதிகள் சிறப்பான முறையில் தேர்ச்... மேலும் பார்க்க

கோவையில் 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பா... மேலும் பார்க்க

கோவை ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப்: 5 போ் கைது

கோவையில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப் வைத்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரயிலை கவிழ்க்க சதியா என்பது குறித்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க