குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
இரணியல் அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
இரணியல் அருகே உள்ள மல்லன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரதாணு பிள்ளை மகன் சிவக்குமாா்(45), தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.
இவா் கடந்த திங்கள்கிழமை ஊரில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குளத்தில் சிவகுமாரின் சடலம் மிதந்தது.
தகவலறிந்த இரணியல் போலீஸாா் அங்கு சென்று சிவக்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.