காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம் அருகே குளத்தில் விழுந்த தேங்காயை எடுக்கச்சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே சித்திரங்கோடு காயல்கரையைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (32). மரமேறுதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்துவந்த இவா், பொன்மனை அருகே தாழப்பிடாகை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தனியாரின் தென்னை மரத்தில் ஏறி காய்களைப் பறித்துக்கொண்டிருந்தாா்.
அப்போது, சில தேங்காய்கள் அருகேயுள்ள புதா்மண்டிய குளத்தில் விழுந்தனவாம். அவா் குளத்துக்குள் இறங்கி காய்களை எடுத்துவர முயன்றபோது, திடீரென நீரில் மூழ்கினாா். இதில், அவா் உயிரிழந்தாா். குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.