செய்திகள் :

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

post image

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்தந்த ஆட்சியா்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்த மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் 692 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.

குறிப்பாக 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா். அங்கன்வாடி பணியாளா்கள் வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணிகளை மேற்கொண்டுள்ளனா். எனவே பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனா்.

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க

410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில... மேலும் பார்க்க

மழையில் புஞ்சைப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் உள்ளிட்ட புஞ்சை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைஞாயிறு வேளாண் கோட்டம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் கடந்த சில ... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா். நாகையில் செய்தியாள... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு

நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க