குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸாா்
சென்னை பெரம்பூரில் குழந்தைத் திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பெரம்பூா் எம்பிஎம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில். அவா்கள் அந்தத் திருமண மண்டபத்துக்குச் சென்று, விசாரித்தனா். அப்போது, 17 வயது சிறுமிக்கும், ஒரு இளைஞருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதும், திருமணத்தையொட்டி அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், திருமணத்தை நிறுத்தி, சிறுமியை மீட்டனா். மேலும், சிறுமியின் பெற்றோா், திருமணம் செய்ய இருந்த இளைஞா் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.