மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி.! டாஸ் வென்று பேட்டிங்!
கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை
தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகரம், வடக்கு மாவட்டத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு, கிராம கமிட்டி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை மாலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வரவுள்ளாா். அவருக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் எனது தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னா், புதுகிராமத்தில் உள்ள ஏ.எஸ்.கே.ஆா். திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில், புதிதாக தோ்வான வாா்டு, கிராம கமிட்டி உறுப்பினா்களுக்கு அவா் அடையாள அட்டைகளை வழங்கிப் பேசுகிறாா்.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலருமான சூரஜ் ஹெக்டே, தமிழ்நாடு காங்கிரஸ் மறுசீராய்வு குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தமிழக பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மண்டலப் பொறுப்பாளா் எஸ்.எஸ். ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்புச் செயலா் ராம்மோகன், மாநிலப் பொதுச் செயலா் அருள்பெத்தையா, மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வீ. சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டேனியல்ராஜ், சுடலையாண்டி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் காமராஜ், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
எனவே, நிகழ்ச்சியில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.