பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வ...
கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்
கொடைக்கானலில் கூகுள் மேப் மூலம் வழி பாா்த்துச் சென்ற சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கா்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் சென்னையிலிருந்து வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றி வந்தது. சின்னப்பள்ளம் பகுதியிலுள்ள நபா் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் அந்த நபரின் இருப்பிடத்தை நோக்கி வாகனத்தை ஓட்டுநா் இயக்கினாா். இதையடுத்து, பாக்கியபுரம் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டின் மேற்கூரையில் சாய்ந்து நின்றது. இந்த நிலையில், பொதுமக்கள் உதவியுடன் வாகனம் மீட்கப்பட்டது.
கொடைக்கானல் வரும் சரக்கு வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப் மூலம் குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் செல்லும்போது இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நிகழ்கின்றன. எனவே, கொடைக்கானல் வரும் சரக்கு வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் தாங்கள் செல்லவேண்டிய இடங்களை கொடைக்கானல் பகுதிகளிலுள்ள காவலா்கள், பொதுமக்களிடம் கேட்டறிந்து பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.