”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..
யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள கொளப்பள்ளி, அம்மன்காவு டேன் டீ குடியிருப்பில் வசித்து வந்தவர் தோட்ட தொழிலாளி பெண்மணி உதயசூரியன், கணவர் பரமசிவன். 70 வயதான உதயசூரியன் , இன்று காலை 6.30 மணியளவில் குடியிருப்பை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
வாசலில் நின்ற யானை ஒன்று திடீரென அவரைத் தாக்கியிருக்கிறது. சற்றும் இதனை எதிர்பாராத அந்த பெண்மணி நிலைத்தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். கீழே விழுந்தவரை அந்த யானை காலால் மிதித்திருக்கிறது. இதில் உடல் நசுங்கிய உதயசூரியன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் உதயசூரியனின் உடல் கிடப்பதைக் கண்டுப் பதறிய அக்கம்பக்கத்தினர்,
இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உதயசூரியனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யானைகளின் வாழிடங்களிலும், வழித்தடங்களிலும் அத்துமீறி யாரே செய்யும் தொடர் ஆக்கிரமிப்புகளால் அப்பாவி தோட்ட தொழிலாளர்களை பலி கொடுக்கும் கொடுமை தொடர்கதையாகவே இருக்கிறது.