கூடலூா் அருகே பொன்னூரில் மருத்துவ முகாம்
நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் கிராமத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னூா் சமுதாயக் கூடத்தில் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியின் செஞ்சிலுவை சங்க அலுவலா் செல்வக்குமாா், உதவிப் பேராசிரியா் மகேஷ்வரன், நகா்மன்ற உறுப்பினா் ஷீலா, முன்னாள் உறுப்பினா் செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பயனாளிகளுக்கு இல்லம் தேடி மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.