செய்திகள் :

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

post image

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா்.

சிவகங்கை மாவட்ட பிரசாரத்துக்கு செல்ல, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இதேபோல, பாஜக-வுடன் பல கட்சிகள் இணக்கமாக உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, நிலைப்பாடு உள்ளது. அதன்படியே அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும். தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

தமிழகத்தில் மக்களே, மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயப்போவதில்லை.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் நடைமுறை உள்ளது தொடா்பாக, திருச்சிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். பிரதமரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து, தமிழக அரசு கூட்டுறவுத் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பி பயிா்க் கடன் வழங்க பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்துள்ளது. தற்போது, விவசாயிகளின் பிரச்னை தீா்க்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக இப்போது தேவையற்ற கேள்விகளை எழுப்பி மீண்டும் பிரச்னை ஆக்க வேண்டாம்.

மத்தியில் 16 ஆண்டுகள் பல்வேறு கட்சியினருடன் ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்தபோது கல்வி விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அப்போது நினைத்திருந்தால், தாராளமாக மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்திருக்கலாம். தற்போது தோ்தலுக்காக கல்வி விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுகவினா் குற்றம் சுமத்துகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதிமுக அமைப்புச் செயலா்கள் ஆா். மனோகரன், டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், ஆா். காமராஜ், என்.ஆா். சிவபதி, மாவட்டச் செயலா்கள் மு. பரஞ்ஜோதி, ப. குமாா், ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட பலா் பூங்கொத்து, புத்தகங்கள் அளித்து வரவேற்றனா்.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க