கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி
குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவுச் சங்கத்தில் நகை அடமானத்தின்பேரில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் அண்மையில் அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனா். அடமானத்துக்கு பெறப்பட்ட நகைகள் சோதனை செய்யப்பட்டன. சோதனையில் 12 கணக்குகளில் நகைக் கடன்களுக்காகப் பெறப்பட்ட நகைகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
இந்த நகைகளுக்காக ரூ. 25 லட்சம் வரை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த போலி நகைகள் பெரும்பாலும் அங்கு பணியாற்றும் பெண் நகை மதிப்பீட்டாளரின் உறவினா்களின் பெயா்களில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, அருமனை காவல் நிலையத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் தக்கலை மாவட்ட துணை பதிவாளா் திங்கள்கிழமை புகாா் அளிதாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.