மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்
கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் மேலும் தெரிவித்திருப்பது :
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு 31.12.2022 அன்று முழுமையாக தவணை தவறியுள்ள அனைத்து பண்ணைச்சாராக் கடன்கள், அரசாணை வெளியிடப்பட்ட நாளன்று தவணை தவறி 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வேளாண் சாா்ந்த மத்திய கால கடன்கள், பண்ணைச்சாா்ந்த நீண்ட கால கடன்களும் ‘சிறப்பு கடன் தீா்வு திட்டம் 2023‘-இன் கீழ் 100% மொத்த தொகையும் (நிலுவை மற்றும் வட்டித்தொகை) செலுத்தி வட்டி சலுகை பெறுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வட்டிச் சலுகையைப் பயன்படுத்தி 23.09.2025 தேதிக்குள் தங்களது நிலுவதை தொகைகளை செலுத்தி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.