செய்திகள் :

கூலியுடன் மோதும் ரெட்ரோ?

post image

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. தற்போது, ஜெய்ப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!

டீசரில் கோடை வெளியீடு எனக் குறிப்பிட்டுள்ளனர். கூலி படமும் கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு படங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கணக்கில் வைத்து ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்றே தெரிகிறது.

எம்.டி.யிடம் மகனாக உணர்ந்தேன்: மம்மூட்டி

எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் எம். டி. வாசுதேவன் நாயர் குறித்து நடிகர் மம்மூட்டி உருக்கமாப் பதிவிட்டுள்ளார்.புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ‘ஞானபீடம்’ விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் ... மேலும் பார்க்க

‘பரிசுத்த காதல்..’ ஒரு கோடி பார்வைகளைக் கடந்த ரெட்ரோ டீசர்!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்தின் பெயர் ... மேலும் பார்க்க

ஓடிடியில் ஸ்குவிட் கேம் - 2!

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசன் இன்று ஓடிடியில் வெளியாகிறது. பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021... மேலும் பார்க்க

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்!

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி... மேலும் பார்க்க

விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளார்.மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.‘மங்க... மேலும் பார்க்க

இன்று உங்களுக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26-12-2024 வியாழக்கிழமைமேஷம்:இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படு... மேலும் பார்க்க