முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
கூலி எப்படி இருக்கிறது? துணை முதல்வரின் ரிவ்யூ!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தை பார்த்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் நாகர்ஜுனா, ஆமீர் கான், சத்ய ராஜ், செளபின், உபேந்திர ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,
“திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேம்.
அவரது நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
மாஸான பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படத்தை நான் முழுமையாக ரசித்தேன், அனைத்து தரப்பினரின் இதயங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், படம் வெற்றிபெற இயக்குநர் லோகேஷ், நடிகர்கள் மற்றும் படக்குழு அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.